அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அடடா..இதெல்லாம் முதல்முறையா நான் பார்க்குறேன்! இது தொடரட்டும்! நெகிழ்ச்சியில் வெங்கட்பிரபு! ஏன் தெரியுமா??
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நேற்று காலை துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் திமுக 158 தொகுதிகளில் முன்னிலையில் வந்து வெற்றி பெற்றது. மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியை பிடித்தது. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இந்தநிலையில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ட்விட்டர் பக்கத்தில் திமுக. தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் அதற்கு நன்றி கூறி பதில் அளித்து வருகிறார்.
So happy to see the wishes pouring in for our honourable chief minister @mkstalin and his replies for the wishes!! First time from the tweets, I am seeing politicians working together for the betterment of our people in this pandemic! Let this positivity be forever! 🙏🏽🙏🏽
— venkat prabhu (@vp_offl) May 3, 2021
இந்தநிலையில் நடிகரும், இயக்குனருமான வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், எங்களது மதிப்பிற்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வாழ்த்துகளுக்கு அவர் பதிலளிப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.இந்த தொற்றுநோய் காலத்தில், நமது மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல்வாதிகள் ட்விட்டரில் ஒன்றிணைந்து செயல்படுவதை முதல் முறையாக நான் காண்கிறேன். இந்த நேர்மறை எப்போதும் இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.