மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷிவாங்கிக்கு மட்டும் சொம்பு தூக்குறாங்க.. விமர்சித்தவருக்கு கொந்தளித்து செஃப் வெங்கடேஷ் பட் பதிலடி!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ஷோ குக் வித் கோமாளி. மக்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில் முந்தைய சீசன்களில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வந்த ஷிவாங்கி குக்காக அவதாரம் எடுத்துள்ளார். மேலும் அவர் இந்த வாரம் நடைபெற்ற ரவுண்டில் நேரடியாக பைனல் போட்டியாளராகவும் தேர்வாகியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நடுவர்கள் ஷிவாங்கிக்கு சொம்பு தூக்கியே பைனல் வரை கொண்டு வந்து விட்டனர் என பலரும் விமர்சித்து வந்தனர்.
இதற்கு பதில் அளித்து வெங்கடேஷ் பட், நானும் ஷிவாங்கியும் அப்பா, பொண்ணு போல பழகினாலும் அது எல்லாம் போட்டிக்கு வெளியேதான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொறுத்தவரை யாருக்கும் எந்த சலுகையும் காட்டுவது கிடையாது. அவர்கள் எவ்வாறு சமைக்கிறார்கள் என்பதை வைத்துதான் தீர்வு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.