#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. சூப்பரு! அதிரடியாக இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் அவர் காஜல், வைபவ், ஆனந்தி நடிப்பில் டெலிகாஸ்ட் என்ற வெப்தொடரையும் இயக்கியிருந்தார். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பின்னர் வெங்கட்பிரபு தற்போது சிம்பு நடிப்பில் மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். மேலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
A Venkat Prabhu ‘QUICKIE’ #VP10 @Rockfortent #BlackTicketCompany
— venkat prabhu (@vp_offl) May 28, 2021
இந்தநிலையில் வெங்கட்பிரபு தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது வெங்கட்பிரபுவின் பத்தாவது திரைப்படம் ஆகும். இதனை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த விபரம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.