திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூர்யாவின் செயலால் தன் முடிவை அதிரடியாக மாற்றிய வெற்றிமாறன்...ரசிகர்கள் ஏமாற்றம் !?
வெற்றிமாறன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்கும், விடுதலை என்கிற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் சூரி ஹிரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்கள். இப்படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும்.
இந்த நிலையில் விடுதலை திரைபடத்தின் நீளத்தை கருதி இரண்டு பாகமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். மேலும் இப்படத்தில் தனுஷ் பாடிய உன்னோட நடந்தா என்ற பாடல் ப்ரொமொவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் நடிகர் தனுஷ், இசைஞானி மற்றும் இயக்குநர் வெற்றி மாறன் போன்றோரின் கலந்துரையாடலுடன் சேர்ந்து பாடலுக்கு ஒத்திகை நடத்தும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இந்த படத்திற்கு பின் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாகவும், கமலின் இந்தியன் 2 படபிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் கமலை வைத்தும் அடுத்த படம் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. ஆனால் சூர்யா தற்போது கைவசம் வைத்திருக்கும் படங்களில் பிஸியாக இருப்பதால் வெற்றிமாறன் கமலை வைத்து அடுத்த படம் இயக்க போவதாக தகவல் உறுதியானது.
சூர்யா சிறுத்தை சிவாவின் சூர்யா 42 திரைபடத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் பின், கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இவ்வாறாக இவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் வெற்றிமாறன் இந்த முடிவை எடுத்துள்ளதாக திரைத்துறை வட்டாரத்தில் தகவல் வெளிவந்துள்ளது.