கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ராகவன் இஸ் பேக்.. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட வேட்டையாடு விளையாடு திரைப்படம்; கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!
கடந்த 2006ம் ஆண்டு கமல் ஹாசன், ஜோதிகா, கமலினி, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஹரிஷ் ஜெயராஜின் அட்டகாசமான இசையில் உருவாகி வெளியான படம் இன்று வரை பலராலும் மறக்க இயலாத திரைப்படம்.
ராகவன் என்ற காவல்துறை அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த கமல் ஹாசனின் அட்டகாசமான நடிப்பு அதனை விரும்பி பார்த்தோருக்கு இன்று வரை கண்களில் நிற்கும்.
இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் 10 மாதங்கள் கடந்துவிட்டன. ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி 2006ல் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இன்று படம் தொழில்நுட்பம் புதுமைப்படுத்தப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.