53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
Vettaiyan: வேட்டையன் படத்தின் முதல் பாடல் வெளியீடு; மாஸ் காண்பித்த மனசிலாயோ.!
டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் அட்டகாசமாக உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி, ரமேஷ் திலக், அபிராமி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
10 அக். அன்று ரிலீஸ்
இப்படம் தீபாவளியை முன்னிட்டு 10 அக்டோபர் 2024 அன்று வெளியாகிறது. படம் ரூ.160 கொடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதே நாளில் சூர்யாவின் கங்குவா வெளியாகுவதாக இருந்த நிலையில், அப்படம் ரஜினிக்காக தள்ளிவைக்கப்பட்டது.
மனசில்லையோ பாடல்
இந்நிலையில், ரஜினிகாந்தின் வேட்டையன் பட முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை மலேஷியா வாசுதேவன் பாடி இருக்கிறார். அதாவது, மறைந்த மலேஷியா வாசுதேவனின் குரலை, ஏஐ தொழில்நுட்பம் கொண்டு பயன்படுத்தி, அவரின் குரல் வாயிலாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கழித்து மலேஷியா வாசுதேவன், ரஜினிக்காக தனது குரலில் பாடியது போன்ற மகிழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் "மனசிலாயோ (Manasilaayo)" தந்துள்ளது.
இதையும் படிங்க: 27 ஆண்டுகள் கழித்து அசத்தல்.. மலேசியா வாசுதேவனின் குரலில் வேட்டையன் பட பாடல்.!
இதையும் படிங்க: "கிளர்வோட்டம்" 96 பட இயக்குனரின் மெய்யழகனை கண்டு வாயடைத்து போய் சீமான் செய்த செயல்.!