மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"திரும்ப மட்டும் வந்துடாதமா தாயே" - தினேஷை திட்டிதீர்த்து ரட்சிதாவை எச்சரித்த விசித்ரா.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது 75 நாட்களைக் கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தொடக்கத்தில் பிற சீசன்களைப் போல இல்லையே என்று பார்வையாளர்கள் ஏங்கித் தவித்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் கலவரம், சண்டைகள், சர்ச்சைகளை பெரிய அளவில் ஏற்படுத்தி இருக்கின்றன.
இதனால் பிக்பாஸ் போட்டியாளர்களை ரோல் மெட்டீரியலாகவும் நெட்டிசன்கள் பயன்படுத்ததி வருகின்றனர். இந்நிலையில் விசித்ரா பேசிய காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில், "சில முகங்களை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் வெறுப்பு போகவில்லை. இவர்கள் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்?, வாழ்ந்து என்ன பிரயோஜனம்.
இப்படிப்பட்ட ஆட்களுடன் எப்படி குடும்பம் நடத்துவார்கள்?. ஓடிவிட வேண்டியதுதான் என்ற நிலை தான் இருக்கும். மூன்று மாதம் இவர்களுடன் குடித்தனம் நடத்த முடியவில்லை என்றால், இவருடன் எப்படி வாழ்க்கை முழுவதும் இருப்பார்கள்?. திரும்பி வந்துடாத தாயே.
— tamilbbvideos01 (@tamilbbvideos01) December 29, 2023
ஒழுங்காக வாழ்க்கையை நடத்து. இவனோடெல்லாம் வாழ்வதற்கு நீ தனியாகவே இருந்துவிடலாம்" என்று பேசி இருக்கிறார். விசித்ரா இவ்வாறு பேசியதற்கு காரணம் என்ன? என்பது தெரியாத நிலையில், காணொளி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் விசித்ரா, தினேஷின் மனைவியான ரட்சிதாவை தான் குறிப்பிட்டு பேசுவதாக கூறுகின்றனர். மேலும் அவர் இவ்வாறு பேசுவது சரி இல்லை கமல் கண்டிக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.