மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இமயமலையில் 14 நாட்கள் நிர்வாணமாக பொழுதை கழிக்கும் பிரபல நடிகர்... யார் அவர் தெரியுமா.?
தமிழில் பில்லா 2, அஞ்சான், துப்பாக்கி போன்ற படங்களில் மிகவும் அழகான ஹேண்ட்சம் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் வித்யுத் ஜம்வால். இவர் வில்லனாக நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. வித்யுத் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வித்தியாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் காட்டு பகுதியில் யார் உதவியும் இன்றி தனிமையில் வசித்து வருகிறார்.
அந்த வகையில் இந்த வருடம் இமயமலை பகுதியில் 7 முதல் 10 நாட்கள் தனது உடலில் எந்த ஆடையும் இன்றி நிர்வாணமாக பொழுதை கழித்து வருகிறார். மேலும் இப்படி இருக்கும் போது தனக்கு புதுவித சக்தி கிடைப்பதாகவும் இமயமலையில் இருந்து கிளம்பும் போது அந்த சக்தியுடன் வீட்டுக்கு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை உள்ளூரில் ஆடு மேய்க்கும் மோஹர் சிங் என்பவர் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.