#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரன் படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு பதில் இந்த நடிகைதான் நடிக்க இருந்ததாம். யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபாலமான இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அதில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ரன். மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமும் இதுவே.
மீரா ஜாஸ்மினுக்கு மிக பெரிய வரவேற்பை தந்த ரன் திரைப்படத்தில் முதலில் நடிகையாக நடிக்க இருந்தது பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன்தானாம். முதலில் அவர் ஒப்பந்தமாகி ஒருசில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அந்த காட்சிகளில் அவருக்கு ஈடுபாடு இல்லாததால் படத்தில் இருந்து அவர் விலகியுள்ளார்.
அதன்பின்னர் மலையாள சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருந்த மீரா ஜாஸ்மினை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் லிங்குசாமி. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார் மீரா ஜாஸ்மின்.