பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
எடை குறைந்து, ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய காமெடி நடிகை! புகைப்படம்!
பிரபல குணசித்திர நடிகர் மோகன்ராமின் மகள் நடிகை வித்யூலேகா ராமன். தமிழ், தெலுங்கு என பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் வித்யூலேகா. வீரம், வி எஸ் ஓ பி, ஜில்லா, மாஸ் போன்ற முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடித்துள்ளார் வித்யூலேகா.
பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருக்கும் இவரது உடல் இடையே இவரது இந்த வளர்ச்சிக்கு காரணம் என்றும் கூறலாம். இந்நிலையில் உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கவர்ச்சியான ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைபடங்களை வெளிட்டார். அதற்கு பல்வேறு பாராட்டுக்களும், விமர்சனங்களும் எழுந்தது.
இந்நிலையில் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய வித்யூலேகா 85.5 கிலோவில் இருந்து 76 கிலோவாக தனது உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடை குறைந்த தனது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் வித்யூலேகா. அந்த புகைப்படத்தில் ஆள் அடையாளமே மாறி மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கின்றார் வித்யூலேகா.