மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபல ஹிந்தி நடிகர்.. அடடே இவரா?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்வியால், கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்து வருகிறார். இதனிடையே அக்ஷய் குமாரை வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அந்தப் படமும் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இயக்குனர் முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்பைடர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால் ஜமால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.