திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அவரை நேரில் பார்த்தாலே ஒரே மகிழ்ச்சிதான் - மனம் திறந்த விக்னேஷ் சிவன்..!
தமிழில் போடா போடி, நானும் ரவுடிதான் தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.
இவர் கூழாங்கல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை தயாரித்தும் வழங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டாராக தமிழகத்தில் கௌரவிக்கப்பட்டு வந்த நயன்தாராவை திருமணம் செய்து, தற்போது தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜித்குமாருடன் இணைந்து திரைப்படம் ஒன்று எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பின் நாட்களில் இந்த அறிவிப்பு மறுக்கப்பட்டது.
இந்நிலையில், எல்.ஜி.எம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்த கிரிக்கெட்டர் எம்.எஸ் தோனியிடம், விக்னேஷ் சிவன் தான் அணிந்திருந்த டி-சர்டில் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறார்.
இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், "எனது கேப்டன், எனது ரோல் மாடல், நான் நேசிக்கும் மனிதன் தோனி.. அவரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் எனது முகத்தில் மகிழ்ச்சியை காண்கிறேன்" என்று கூறியுள்ளார்.