#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விக்னேஷ் சிவன் மன வேதனையுடன் பகிர்ந்த ட்விட்டர் ஸ்டோரி"! ஒரு வருஷம் ஆகிடுச்சா???, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
தமிழ் சினிமாவில் 'போடா போடி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'நானும் ரவுடிதான்', சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரை வைத்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இவர் அஜித் குமார் நடிப்பில் உருவாகயிருக்கும் ஏகே 62 திரைப்படத்திற்கு இயக்குனராக ஒப்பந்தமாகி இருந்தார்.
கடந்த வருட மார்ச் மாதமே இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் அஜித்தின் துணிவு படத்தின் வெளியீட்டிருக்குப் பிறகு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டு தற்போது மகிழ்ந்திருமேனி அஜித் குமார் நடிக்கும் 62 வது படத்தை இயக்கயிருக்கிறார்.
இந்தப் படம் கைநழுவி போனதிலிருந்து விக்னேஷ் சிவன் மிகவும் மன அழுத்தத்திலிருப்பதாக தெரிகிறது. அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சோகமான ஸ்டோரிகள் மற்றும் ஸ்டேட்டஸ்களை பதிவிட்டு வருகிறார். அவரது மனைவி நயன்தாராவும் விக்னேஷ் சிவனை இதிலிருந்து எப்படியாவது மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இதற்காக இருவரும் மும்பை சென்று ஹிந்தி நடிகர்களை சந்தித்து படம் இயக்குவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் வரும் 'கிடைத்ததை இழக்கிறதும், இழந்தது கிடைக்கிறதும்' என்ற பாடல் வரிகளை ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் ஏகே 62 படத்திலிருந்து நீக்கப்பட்ட சம்பவத்திலிருந்து இன்னும் வெளியே வர முடியாமல் தவித்து வருவதாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.