திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவனின் அசத்தலான புகைப்படம்..
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து வெளியான 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் இயக்கி தமிழில் பிரபலமானார்.
விக்னேஷ் சிவன் முதன் முதலில் சிம்பு, வரலட்சுமி நடித்த 'போடா போடி' திரைப்படத்தில் இயக்கி தமிழில் அறிமுகமானார். இதன் பிறகு தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' பாவ கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் விக்னேஷ் சிவனிற்கும், பிரபல நடிகை நயன்தாராவிற்கும் திருமணம் நடைபெற்று பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதன்பிறகு வாடகைதாய் மூலம் இரு குழந்தைகளை பெற்றுக்கொண்ட விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர்களை சுற்றி சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், எதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டே தான் இருக்கின்றனர். இது போன்ற நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார். இப்புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.