மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி ஆகிடுச்சே...தளபதி விஜய் - கார்த்தி மோதல்.! சிக்கலில் நெட் ஃபிளிக்ஸ்.!
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தியாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இவருடன் திரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத், மிஸ்கின், கௌதமேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்டப்படப் பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் துவங்க இருக்கிறது. இந்தத் திரைப்படம் ஆயுத பூஜை அன்று வெளியாகும் என படத்தின் ப்ரோமோ வீடியோவில் பட குழு அறிவித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது
ரஜினி முருகன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ஜப்பான். இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் மாற்றமாக லியோ படத்துடன் மோதவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான ப்ரோமோ வீடியோவில் அக்டோபர் 19ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெட் ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் netflix நிறுவனம் தான் இந்த இரண்டு திரைப்படங்களையும் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. தற்போது இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் அந்த நிறுவனம் மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது. இது தொடர்பாக ஜப்பான் திரைப்பட குழுவினருடன் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். லியோ திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவித்ததால் அந்த திரைப்படத்திற்கு சிக்கலில்லை.