மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட நம்ம விஜய் ஆண்டனியா இது.. விபத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டாரே.!
கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி சில காலமாக படங்களில் நடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். இவர் இசையை ரசிப்பதற்கென்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்தாலும் இவர் நடிப்பிற்காக ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.
இவர் முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த 'சலீம்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதன் பிறகு நான், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன், திமிர் பிடித்தவன், தமிழரசன், போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார்.
மேலும் இவர் இசையமைத்த பல படங்களின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து திரையரங்கில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கும் 'பிச்சைக்காரன் 2' படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது எலும்பு முறிவு ஏற்பட்டு அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்திலிருந்து மீண்டு வந்து மறுபடியும் மலேசியாவில் நடைபெற்று வரும் 'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஆனால் இந்த விபத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் முகம் மாறிவிட்டதாக சமீபத்தில் அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.