#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மக்கள் திலகத்தின் மறு உருவமே! எம்ஜிஆர் ஆன தளபதி விஜய்! பரபரப்பை கிளப்பிய போஸ்டர் இதோ!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய்.இவருக்கென நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் நற்பணி மன்றங்கள் அமைத்து அதன் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
மேலும் தளபதி விஜய்யும் சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது, ஏழை மக்களுக்கு உதவுவது போன்றவற்றை செய்து வருகிறார். இந்நிலையில் தளபதி அரசியலுக்கு வரவேண்டும் என பலரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் மதுரையில் அவரது ரசிகர்கள் விஜய்யின் படத்தை எம்ஜிஆர் போலவும், அவரது மனைவி சங்கீதாவின் படத்தை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து புரட்சித்தலைவரே புரட்சித்தலைவியே என போஸ்டர் அடித்து பரபரப்பை கிளப்பினர்.
அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் மன்ற தலைமை செயலாளர் ஈசிஆர் சரவணன் தளபதி மீதுள்ள பாசத்தால் எம்ஜிஆரின் புகைப்படத்தை போன்றே தளபதி விஜய்யை வைத்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.