அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
நடிகர் அஜித்தை செல்போனில் தொடர்பு கொண்ட விஜய்.. இதுதான் காரணமா?
நடிகர் அஜித் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் நடிகர் விஜய் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழே மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அதனை சரி செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் அஜித்குமார் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் சக நடிகரான தளபதி விஜய், அஜித்தை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.