திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இயக்குனர்களை குறித்து சர்ச்சையாக பேசிய விஜய் தேவரகொண்டா.? அதிர்ச்சியில் திரையுலகம்.!?
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் தெலுங்கில் முதன் முதலில் நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் பல ஹிட் திரைப்படங்களை அளித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் சமந்தாவுடன் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த திரைப்படம் குஷி. இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. மேலும் 50 கோடி அளவிற்கு வசூலை குவித்தது. ஆனால் சமந்தா தனியாக நடித்த யசோதா திரைப்படம் 50 கோடி அளவு வசூலை பெற்றதால், இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்று பலர் விமர்சித்து வந்தனர்.
இது போன்ற நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தை இயக்கிய பரசுராம் என்பவரின் இயக்கத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா, ஃபேமிலி ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிவு பணிகள் முடிவடைந்து விரைவில் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, "அறிமுக இயக்குனர்களின் படங்களில் இனிமேல் நடிக்கப் போவதில்லை. என்னை வைத்து இயக்க வேண்டும் என்றால் ஒரு படத்தையாவது இயக்கியிருக்க வேண்டும்" என்று பேசியது இயக்குனர்களை அவமானப்படுத்தும் விதமாக உள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.