#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செம.. பிறந்தநாளன்று நள்ளிரவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்! கண்கலங்கிய சமந்தா! வைரல் வீடியோ!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அவர் தற்போது தெலுங்கு படத்தின் சூட்டிங்கிற்காக ஸ்ரீநகரில் தங்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா நேற்று தனது 35வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். இந்நிலையில் சமந்தாவின் பிறந்தநாளில் அவருக்கு படக்குழுவினரும், விஜய் தேவரகொண்டாவும் சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக போலியாக படத்தின் சூட்டிங் நடப்பது போல் ஏற்பாடு செய்து, அதில் சமந்தாவிற்கு வசனங்கள் கொடுக்கப்பட்டு நடிக்க வைத்துள்ளனர்.
இதனை உண்மையென எண்ணிய சமந்தா மிகவும் சீரியஸாக விஜய்தேவரகொண்டாவை கண்டு காதல் வசனங்களை பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது விஜய் தேவரகொண்டா சமந்தா என கூறவும், என்ன என் பெயரை கூப்பிடுகிறீர்கள் என்று சமந்தா சிரிக்க, விஜய் தேவரகொண்டாவும் சிரித்துக் கொண்டே பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் சமந்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். அதனைக் கண்டு சமந்தா இன்ப அதிர்ச்சி அடைந்து கண்கலங்கியுள்ளார். இந்த வீடியோவை விஜய்தேவரகொண்டா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.