மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் கைகளில் படிந்த ரத்தம் அவர்களின் மரணம் அல்ல.. என் சொந்த மறுபிறப்பு" - விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்.!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா, மொழிகளை கடந்து பெண் ரசிகர்களை பெற்றவர் ஆவார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேமிலி ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்:
அதனைத்தொடர்ந்து, அவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படம் ஒன்றில் நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்படத்தை ரவி கிரண் கோலா இயக்கி வழங்குகிறார். பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி, நல்ல வரவேற்பை தக்கவைக்கும் கிராமத்து பாரம்பரிய கதையுடன் இப்படம் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
“The blood on my hands is not of their death.. but of my own rebirth..“
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 9, 2024
Ravi Kiran Kola X Vijay Deverakonda@SVC_official pic.twitter.com/xGXXiNbVQu
மே 09 ம் தேதியான இன்று அதற்கான அப்டேட் தெரிவிப்பதாகவும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை உறுதி செய்யும் பொருட்டு ரத்தமும் அரிவாலுமாக புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் என் கைகளில் படிந்த ரத்தம் அவர்களின் மரணம் அல்ல.. என் சொந்த மறுபிறப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள்:
விஜய் தேவரகொண்டாவின் 14 வது படமான இப்படத்திற்கு தலைப்பு ஏதும் வைக்கப்படவில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்புப்படி படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் படக்குழு சார்பில் தெரிவிக்கப்படும்.