மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புரட்சி தலைவரே- புரட்சி தலைவியே!! மதுரையில் விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா! தெறி போஸ்டர் இதோ!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய்.இவருக்கென நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் நற்பணி மன்றங்கள் அமைத்து அதன் மூலம் வறுமையில் வாடுபவர்களுக்கும், பல இக்கட்டான சூழ்நிலையால் தவிப்பவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் தளபதி விஜய்யும் சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது, ஏழை மக்களுக்கு உதவுவது என பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என பலரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் அவரது ரசிகர்கள் விஜய்யின் படத்தை எம்ஜிஆர் போலவும், அவரது மனைவி சங்கீதாவின் படத்தை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து புரட்சித்தலைவரே புரட்சித்தலைவியே என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.