#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி விஜயின் அப்பாவா இது... ஆளே மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படம்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு என சிறியவர் முதல் பெரியவர் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தளபதி விஜயின் தந்தை பிரபல இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் நடிகர் விஜயை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் ஆகிய முன்னணி நடிகர்களை வைத்தும் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பிற மொழியிலும் முன்னணி நடிகர்களை வைத்து ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சிறந்த இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது எஸ்.ஏ. சந்திரசேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் இமயமலை சுற்றுலா புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். ராயல் என்ஃபீல்டு பைக்கில் அமர்ந்து இருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தை போல இவர் பைக்கில் உலகம் சுற்ற இருக்கிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
#Himalayas pic.twitter.com/tSay0qk3w5
— S A Chandrasekhar (@Dir_SAC) November 1, 2022