பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விஜய்க்கு கொஞ்சம் கூட பிடிக்காமல் நடித்து, செம மாஸ் காட்டிய படம் இதுதான்.! முக்கிய பிரபலம் கூறிய ஷாக் தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பார்ப்பவர் தளபதி விஜய். மேலும் அவருக்கு என உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதுமட்டுமின்றி அவருக்கென ரசிகர் மன்றங்கள், மக்கள் மன்றம் என பல அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதன் மூலம் ரசிகர்கள் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றனர். தளபதி விஜய்யின் படங்கள் வெளியாகும் நாட்களை திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இப்படம் தீபாவளியன்று ரிலீசாகிறது என அறிவிப்பு வெளிவந்தநிலையில் படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் விஜய் சினிமாவில் நடிக்கத் துவங்கிய காலங்களில் காதல் கலந்த காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அப்பொழுது ஆக்சன் படங்களில் நடிக்கலாமா என யோசித்த நிலையில் அது தனக்கு செட்டாகுமா என மிகவும் குழப்பத்தில் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பகவதி படத்தில் ஆக்சன் ஹீரோவாக களமிறங்கினார். ஆனால் அப்படத்தில் நடிக்க அவருக்கு விருப்பமே இல்லை. அதனாலேயே அப்படத்தை முழு நீள ஆக்ஷன் படமாக இல்லாமல் காமெடியுடன் இயக்கியுள்ளனர். ஆனால் இப்படத்தில் விஜய்யின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் விஜய்க்கு ஆக்சன் படங்களில் நடிக்கும் நம்பிக்கை வந்தது என கூறியுள்ளார்.