மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் ரசிகர்களே ரெடியா? நாளை சம்பவம் உறுதி.. படக்குழு கொடுத்த அசத்தல் அப்டேட்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதற்கட்ட படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் வெளியான அப்டேட்டில் GOAT திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
Naalai sambavam urudhi 🔥 🔥
— venkat prabhu (@vp_offl) April 13, 2024
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் நாளை சம்பவம் உறுதி என்று பதிவிட்டுள்ளார். அதன்படி, நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு GOAT படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.