96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அரசியலுக்கான துவக்கமா? தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். இவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த சில படங்கள் அரசியல் கருத்தை வெளிகொணர்ந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவரை அரசியல் களத்தில் காண பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
மேலும் தளபதி விஜய் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 169 பேர் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் 129பேர் அதிகபட்ச வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் தனது படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் தடை விதித்தும், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து அவர்களது ஆதரவுடன் தேர்தலில் நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் வெற்றிபெற்றவர்கள் பனையூரில் நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். மேலும் அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.