#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எதிர்நீச்சலில் அப்பத்தாவாக களமிறங்கப் போகும் விஜய் பட நடிகை!" யார் தெரியுமா.?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொலைக்காட்சித் தொடர் தான் "எதிர் நீச்சல்". இந்த தொடருக்கு பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் ரசிகர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டுக் குடும்பத்தில் ஆணாதிக்க மனப்பான்மையை மையமாக கொண்ட தொடர் இது.
இந்தத் தொடரில் வீட்டின் மூத்த மகனாக ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த மாரிமுத்துவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. சமீபத்தில் அவர் மாரடைப்பால் காலமடைந்ததை அடுத்து தொடரில் அடுத்த குண சேகரனாக யார் என்று எதிர்பார்ப்பு மேலிட்டது.
இதுவரை தொய்வடைந்திருந்த இத்தொடரில் தற்போது புது கதாப்பாத்திரங்களின் வரவால், சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஜனனியின் அண்ணன் மகன்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், தற்போது அவரது அப்பத்தாவாக விஜய் பட நடிகை களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கில்லி படத்தில் பிரகாஷ் ராஜுக்கு அம்மாவாகவும், குருவி படத்தில் விஜய்க்கு அம்மாவாகவும் நடித்த டி. கே. கலா தான் ஜனனிக்கு அப்பத்தாவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடகியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.