திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த செயல்.. பாராட்டும் ரசிகர்கள்.!
தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய். தனது 10வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல தோல்விகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு இன்றைய உச்ச நிலையை அடைந்துள்ளார் விஜய்.
விஜய் தனது ரசிகர் மன்றத்தை "விஜய் மக்கள் இயக்கம்" என்று மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். சமீபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
இது அவர் அரசியலுக்கு வருவதற்கான முன்னோடி என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது விஜயின் மக்கள் இயக்கத்தினர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன் பெரும் வகையில் இலவச நூலகத்தை தொடங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கோவை தெற்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நேற்று கிணத்துக்கடவு தொகுதி எட்டிமடையில் விஜய் நூலகம் தொடங்கப்பட்டது. இங்கு கதைப்புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் மட்டுமல்லாது இலவச இணைய வசதியும் ஏற்படுத்தி உள்ளதை மக்கள் பாராட்டி வருகின்றனர்.