பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மாஸ்டர் படப்பிடிப்பின் கடைசிநாள் இயக்குனருடன் சேர்ந்து விஜய் செய்த காரியம்! தீயாய் பரவும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பர் நடிகர் விஜய். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்
மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பின் கடைசி நாள் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் படப்பிடிப்பின் இறுதிநாளில் நெய்வேலியில் நடிகர் விஜய், மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மரம் நட்டு வைத்துள்ளனர் . அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
#Thalapathy #Vijay and Director #LokeshKanagaraj planted a Tree in Neyveli during the last day shoot of #Master. @actorvijay @Dir_Lokesh @MasterOfficiaI @Jagadishbliss pic.twitter.com/4YmMa5LqmK
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) March 5, 2020