விஜய்யின் பலே பாராட்டை பெற்ற திரைப்படம்! உற்சாகத்தில் மூழ்கிய படக்குழுவினர்!



vijay-saw-and-wishes-the-movie-kgf

கன்னட திரையுலகில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம்  கே.ஜி.எப். இந்த படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் திரையுலகில் அறிமுகமான இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 

 மேலும் கே.ஜி.எப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. 

இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷாலின் ‘விஷால் பிலிம் பேக்டரி’ வெளியிட்டது. இந்நிலையில் பெரும் வரவேற்பை பெற்ற பார்க்க நடிகர் விஜய் விருப்பப்பட்டார். இந்நிலையில் அவருக்காக சென்னையில் படம் திரையிடப்பட்டது.

vijay

படத்தை பார்த்த விஜய், படம் எடுக்கப்பட்ட விதம் மிகவும் பிரமாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளதாக பாராட்டினார்.மேலும்  படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.