#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் விஜய் சேதுபதியின் கெட்டப் புகைப்படங்கள் லீக்..!!
தெலுங்கின் மெகா ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி தற்போது 'சயிரா நரசிம்ம ரெட்டி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கிவருகிறார். மேலும் இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து தமிழ் திரையுலகின் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா போன்ற பல பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தினை சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண் ‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார்.
இணையத்தில் லீக்கான விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் புகைப்படங்கள்!
விஜய் சேதுபதி நடிப்பில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படத்தின் காட்சிகள் தற்போது புகைப்படங்களாக இணையத்தில் லீக்காகியுள்ளன..
ரசிகர்கள் சிலர், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்பட்டங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய்சேதுபதி ஜடா முடி தரித்து, நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு சாமியார் போல இருக்கிறார்.
ஆந்திராவின் சுதந்திர போராட்டத்தின் போது புரட்சி வெடிக்க காரணமாக இருந்த, சயீராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. தெலுங்கு, இந்தி மற்றும் தமிழில் இந்த படம் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய்சேதுபதி தமிழ் மன்னனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் அவர் சாமியார் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.