மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுதான் விக்ரம் படத்திற்காக எனக்கு கிடைத்த கிப்ட்.! நெகிழ்ச்சியில் விஜய் சேதுபதி!! என்னனு தெரியுமா??
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளனர். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்தது. இந்த நிலையில் நடிகர் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு lexus சொகுசு காரை பரிசாக வழங்கினார். மேலும் 13 உதவி இயக்குனர்களுக்கு Apache RTR 160 கிப்ட்டாக கொடுத்துள்ளாராம். மேலும் கடைசி 3 நிமிடங்களே வந்தாலும் திரையரங்குகளை தெறிக்கவிட்ட நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்துள்ளார்.
இந்நிலையில் மாமனிதன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் சேதுபதியிடம், விக்ரம் படத்தில் சந்தானமாக நடித்த உங்களுக்கு கமல் என்ன பரிசு கொடுத்தார் என கேள்வியெழுப்பபட்டது. அதற்கு அவர், "விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதுவே எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். இது நான் வாழ்நாளில் கற்பனை கூட பண்ணிப் பார்த்திராத விஷயம் என தெரிவித்துள்ளார்.