வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
"கீர்த்தி செட்டி என் பொண்ணு மாதிரி, அவங்க கூட ரொமான்ஸ் வேண்டாம்" விஜய் சேதுபதி விளக்கம்..
கோலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தற்போது திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
மேலும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். வித்யாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்துவரும் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கென தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றன.
இது போன்ற நிலையில், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக விஜய் சேதுபதி ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார். அப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டியை நடிக்க வைக்க படகுழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி மறுத்துவிட்டார்.
இதற்கு தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது, "தெலுங்கில் உப்பெனா எனும் மிகப்பெரும் வெற்றியடைந்த திரைப்படத்தில் மகளாக கீர்த்தி செட்டி எனது மகளாக நடித்திருந்தார். அவரை மகள் போல் பார்த்துவிட்டு அவருடன் ரொமான்ஸ் செய்ய முடியாது" என்று மறுத்ததாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.