#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், புதிய ஸ்டைலில் கெத்துகாட்டும் விஜய்சேதுபதி! இணையத்தை கலக்கும் மாஸ் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, தனது தனித்துவமான நடிப்பாலும், திறமையாலும் மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முதியவராக, திருநங்கையாக பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவந்த விஜய் சேதுபதி, ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் வில்லனாகவும் களமிறங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அப்படம் கொரோனா ஊரடங்கு முடிவடைந்தபின் திரைக்கு வர உள்ளது. மேலும் விஜய்சேதுபதியின் கைவசம் தற்போது கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், காத்து வாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்கள் உள்ளன.
இந்த நிலையில் தற்போது லாக்டவுனில் இருக்கும் விஜய் சேதுபதி நரைத்த முடியுடன், இதுவரை யாரும் பார்த்திராத சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தாடியுடன் செம கெத்தாக போன் பேசிக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வேற லெவல் என ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.