வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா? அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகினர்!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய்சேதுபதி. குறுகிய காலத்தில் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமாகி தனக்கென ஒரு மாபெரும் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் விஜய் சேதுபதி. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பெருமளவில் பயன்படுத்திக்கொண்டு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட அவர் அதனை தொடர்ந்து தற்போது நரசிம்மா ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.சிரஞ்சீவி நடிக்கும் இப்படத்தில் அவருக்கு உதவி செய்யும் தமிழர் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
மேலும் அந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிதான் நடிக்க வேண்டும் என சிரஞ்சீவியே ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது அதனை தொடர்ந்து விஜய்சேதுபதி மீண்டும் சிரஞ்சீவியின் சகோதரியின் இரண்டாவது மகன் வைஷ்ணவ தேவ் கதாநாயகனாக அறிமுகமாகும் உப்பெனா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளார். மேலும் அப்படத்தில் நடிகை விஜய்சேதுபதிக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஒரு வில்லன் நடிகருக்கு இவ்வளவு சம்பளமா என தெலுங்கு சினிமா ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.