குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அரசியலில் நுழைகிறாரா விஜய் சேதுபதி.. வைரலாகும் புகைப்படங்கள்.!
நடிகராகவும், தயாரிப்பாளர், பாடகர் , பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவராக உள்ளவர் விஜய் சேதுபதி. இவர் 2010ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் "தென்மேற்குப் பருவக்காற்று" திரைப்படத்தில் அறிமுகமானார்.
தெடர்ந்து நானும் ரவுடி தான், சேதுபதி, 96 உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ள இவர், இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் 3 விஜய் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது ஹிந்தியிலும் கால் பதித்துள்ள விஜய் சேதுபதி காத்ரீனா கைப் உடன் "மெர்ரி கிறிஸ்துமஸ்" என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் மவுன மொழிப் படமான "காந்தி டாக்ஸ்" படத்திலும் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
இதற்காக காந்தி டாக்ஸ் படக்குழுவினருடன் கோவா சென்றுள்ள விஜய் சேதுபதி, அங்கு வந்திருந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோருடன் சேர்ந்து போட்டியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.