திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அந்த இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்து..நயன்தாராவுக்கு ஓகே சொன்ன விஜய் சேதுபதி.!
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் தற்போது பிஸியாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியான 'ஃபார்ஸி' வெப் சீரியஸ் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது தவிர அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார்.
தல அஜித் குமாரை வைத்து விக்னேஷ் சிவன் 'ஏகே62' திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு தற்போது மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். அந்தத் திரைப்படத்தின் பூஜையும் துவங்கப்பட்டு விரைவில் படப்பிடிப்பு துவங்கயிருக்கிறது.
விக்னேஷ் சிவன் ஏ கே 62 படத்திலிருந்து நீக்கப்பட்டதால் அஜித் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. நயன்தாரா அஜித்குமாருக்கு பெர்சனலாக கால் செய்து கேட்டுக் கொண்ட போதும் அஜித் தனது முடிவில் உறுதியாக இருந்து விக்னேஷ் சிவனை நீக்கியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்துக்காக தயார் செய்து வைத்திருந்த கதையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
நயன்தாராவின் ஆலோசனைப்படி விக்னேஷ் சிவன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து அந்தக் கதையை படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேசி இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை சம்மதிக்க வைத்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக அவர் அரண்மனை 4 படத்திலிருந்து விலகியதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பளம் மற்றும் கதை பிடிக்கவில்லை போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி அரண்மனை 4 படத்திலிருந்து விலகி இருக்கிறார் என்பதுதான் என சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளி வருகின்றன. இதன் காரணமாக இயக்குனர் சுந்தர் சி அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.