ஒரே ட்விட்டில் மாறிய நிலைமை.! சமூக வலைதளத்தில் நடிகர் விஜயின் செல்வாக்கு குறைந்ததா.!



Vijay situation  turned upside down in single day

விஜய் தன்னுடைய தந்தையின் செல்வாக்கு காரணமாக, திரைத்துறைக்கு வந்திருந்தாலும், அதன் பிறகு அவர் திரைத்துறையில் நிலைத்து நிற்க பல்வேறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் தான், மிது மெதுவாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார்.

vijay

12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தொகுதி ரீதியாக பரிசுகளை வழங்கியிருந்தார். அதேபோல தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நூலகம் திறப்பதற்கு முடிவு செய்தார். நடிகர் விஜய். ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் இப்படியெல்லாம் செய்து வருகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழ தொடங்கியது. ஆனாலும் நடைபெறும் விஜய்க்கு வரவேற்பு சற்று அதிகமாகத்தான் இருந்தது.

ஆனாலும், சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வந்த நிலையில், புயல் ஏற்பட்டு 2 நாட்களுக்கு பின்னர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். இவ்வளவு காலதாமதமாக அவர் இந்த பதிவை போட்டிருந்தது. அனைவரும் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவருடைய இந்த பதிவுக்கு 72,000 விருப்பங்கள் மட்டுமே வந்திருக்கிறது. அவர் சிறிதளவில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டால் கூட 2 லட்சம் விருப்பங்கள் வரும் ஆனால் தற்போது 72000 விருப்பங்கள் மட்டுமே இந்த பதிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

vijayசூர்யா, அஜித் உள்ளிட்ட நடிகர்கள் உடனடியாக இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்த நிலையில் விஜயின் இந்த செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.