#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"மீண்டும் ரஜினியை முந்திய விஜய்!" இளையதளபதியின் ரசிகர்கள் உற்சாகம்!
தென்னிந்திய திரையுலகில் மிக முக்கிய முன்னணி நடிகராக இருப்பவர் 'தளபதி' விஜய். கோலிவுட்டின் வசூல் மன்னனாக இருக்கும் விஜய், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பொதுவாக உச்ச நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி தான் இருப்பர்.
நடிகர் விஜயும் அப்படித்தான் எந்த சமூக வலைத்தளத்திலும் கணக்கு தொடங்காமல் இருந்தார். ஆனால் சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விஜய் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாக்ராம் பக்கத்தை தொடங்கினார். அவர் கணக்கு தொடங்கிய சில நிமிடத்திலேயே பல மில்லியன் பாலோயர்கள் குவிந்தனர்.
தற்போது 10 மில்லியன் பாலோயர்களைக் கொண்டிருக்கும் விஜய், மற்ற நடிகர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தில் உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்த 2018ம் ஆண்டே இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கியிருந்தார். அப்போது ஒரு போஸ்டை மட்டும் வெளியிட்ட ரஜினி, அதன்பிறகு எதுவும் பதிவிடவில்லை.
தற்போது ரஜினிக்கு இன்ஸ்டாகிராமில் 1.2மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் அனைத்து விஷயத்திலும் ரஜினியுடன் விஜயை ஒப்பிட்டு வரும் ரசிகர்கள், இப்போதும் ரஜினியுடன் ஒப்பிட்டு விஜய் தான் டாப் என்று கூறி வருகின்றனர்.