மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் நடிகர் யார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய மகன் சஞ்சய் தன்னுடைய அப்பாவை போலவே சினிமாவில் கால் தடம் பதிக்க உள்ளார்.
ஆனால் தளபதி விஜய் போல் நடிகராக இல்லாமல், இயக்குனராக அறிமுகமாகிறார். வெளிநாட்டில் சினிமா துறை சார்ந்த படிப்பை முடித்துள்ள சஞ்சய் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கம் முதல் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் அறிவிப்பு குறித்த அறிவிப்பு என்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி அல்லது ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் சஞ்சய்க்கு விஜய் சேதுபதி மற்றும் ஜீவாவை ரொம்ப பிடிக்கும் என்று அவரது குடும்பத்தினர் பேட்டிகளில் கூறியுள்ளனர்.