பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இஸ்லாம் மதத்திற்கு மாறிய மணிமேகலை.!? வைரலாகும் புகைப்படம்..! கமெண்ட் செய்த ரசிகர்களை திட்டிய மணிமேகலை..?
தொலைக்காட்சி தொகுப்பாளரும், வீடியோ ஜாக்கியுமான மணிமேகலை கிட்டதட்ட 12 ஆண்டுகளாக தொலைக்காட்சி துறையில் பணியாற்றியுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் பணியாற்றிய மணிமேகலை 2019ஆம் வருடம் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார்.
தனது 17வயதில் சன் மியூசிக்கில் சூப்பர் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இதன்பின் கோலிவுட் டைரிஸ், பிராங்கா சொல்லட்டா, ப்ளாக் போன்ற நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமானார். உலக மனித ஒருங்கிணைப்பு கவுன்சில் 2019ஆம் ஆண்டில் இவருக்கு 'சிறந்த தொகுப்பாளர் ' விருது வழங்கிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2017ஆம் ஆண்டு தனது காதல் கணவனான ஹுசைன் என்பவரை பெற்றோர் சம்மதம்.இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். இதன் பின் பல சர்ச்சைகளில் சிக்கிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் இணைந்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி பெரியளவில் வெற்றி பெற்றது. ஆனால் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து சில காரணங்களால் விலகிவிட்டார்.
இதுபோன்ற நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை அவரது கணவரின் மதமான இஸ்லாம் மததிற்கு மாறிவிட்டதாக ஒரு புகைப்படம் ஒன்று வைரலானது. இதற்கு பதிலளித்த மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் உருப்படுற வேலையை பாக்கலாம்ல என்று பதிவு எழுதியுள்ளார்.