"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
Baakiyalakshmi Promo: அமிர்தா - எழில் வாழ்க்கையில் இனி நடக்கப்போவது என்ன?.. கெளசிக் போல குறுக்கே வந்த அமிர்தாவின் கணவர்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில், தமிழக மக்களின் ஆதரவை பெற்றதாக பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. கடந்த 2020 ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர், டிசம்பர் 18 அன்று தனது 1000 எபிசோடில் அடியெடுத்து வைத்தது.
அதனைத்தொடர்ந்து, ஆயிரம் எபிசோட்களை கடந்தது நெடுந்தொடர் தினமும் வாரத்தின் 6 நாட்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இத்தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் ரேஷிமா பசுபுலேட்டி, கே.எஸ் சுசித்ரா, நேஹா மேனன், திவ்யா கணேஷ், சதிஷ் குமார், நந்திதா ஜெனிபர் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
கடந்த வாரத்தில் கோபி - பாக்யா இணையரின் மூத்த மகன் செழியன் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படுவது போன்ற காட்சிகள் பதிவான நிலையில், தற்போது எழில் - அம்ரிதா வாழ்க்கையில் பிரச்சனையை உண்டாக்க, அமிர்தாவின் கணவர் மீண்டும் வந்துள்ளார். இதனால் வரும் வாரம் மிகுந்த பரபரப்புடன் நெடுந்தொடர் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.