மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீயே காலேஜ் போற.. இந்த வயசுல குழந்தை தேவையா? - பாக்யலட்சுமி இனியாவை கேள்வியால் விளாசிய நெட்டிசன்கள்..! திருந்தவே மாட்டாங்க போல..!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வாணி ராணி தொடரில், தேனு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் நேஹா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு முன்னதாக சிபிராஜின் ஜாக்சன் துறை ஆகிய படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனக்கு அழகிய தங்கை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். நேஹாவின் பெற்றோர் நேஹாவுக்கு பின்னர் 20 ஆண்டுகள் கழித்து அவருக்கு தங்கையை பெற்று கொடுத்துள்ளனர்.
இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் தனது ரசிகர்களுக்கு தெரிவித்து மகிழ்ச்சியடைந்த நிலையில், ஒருசிலர் இந்த வயதில் உங்களின் அம்மா - அப்பாவுக்கு குழந்தை தேவையா? என்பதை போல கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நேஹா, "குப்பை பதிவுகளுக்கு நான் பதில் அளிக்கப்போவது இல்லை. உங்களின் நேரத்தை இங்கு வீணடிக்காதீர்கள்" என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் தனது தங்கையின் முதல் பிறந்தநாளை அவர் கொண்டாடி முடித்தார். அதனைத்தொடர்ந்து, அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ரசிகர் என்ற பெயரில் ஒருவர் கல்லூரி செல்லும் வயதில் உன்னை வைத்துக்கொண்டு பெற்றோருக்கு இன்னொரு குழந்தையா? என்று எடக்கு மடக்கான கேள்வியை எழுப்பியிருந்தார்.
இதற்கு நெத்தியடி பதிலளித்த நேஹா, சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்க வேண்டாம். கல்லூரியில் படிக்கும் பெண்ணாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் எந்த வயதிலும் குழந்தையை பெற்றெடுப்பது தவறு கிடையாது. உங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்து இருந்தார்.