மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாரதி கண்ணம்மாவின் க்ளைமேஸ் இதுவா?.. பாரதியின் செயலால் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்புபெற்ற நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் 2 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், 900 எபிசோடுகளை கடந்துள்ளது. முதலில் பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், ஒரே கதையை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருப்பதால் எப்பொழுதுதான் பாரதி கண்ணம்மாவை முடிப்பீர்கள் என்று ரசிகர்கள் வெறுக்கும்வரை ஆகிவிட்டது.
இந்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முன்பே தீவிரவாதிகளால் பாரதி பிடிக்கப்பட்டு அவர் மீது பாம் வைத்த நிலையில், கண்ணம்மா அவரின் உயிரை காப்பாற்றி மருத்துவமனையில் இருந்து மீட்டு வருவார். இதனை தொடர்ந்து கண்ணம்மா பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாரதியின் வீட்டில் தங்கியிருப்பார். இதன்பின் இருவரும் ஒன்று சேருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துவரும் நிலையில், இந்த வார ப்ரோமோ அட்டகாசமாக வெளியாகியுள்ளது.
அதில் "லட்சுமி மற்றும் ஹேமா சகதோழிகளுடன் சண்டையிட்டு கொள்கின்றனர். இதனை கண்ட அவர்களின் ஆசிரியை உங்களது பெற்றோர் வந்தால் மட்டுமே நாளை நீங்கள் வகுப்பறைக்குள் நுழைய முடியும் என்று கோபத்துடன் கத்திவிட்டு செல்கிறார். அடுத்த நாள் பாரதி ஹேமாவிற்காக வந்து கையெழுத்து போட்டு, இனி ஹேமா அப்படி நடந்து கொள்ளமாட்டார் என்று உறுதியளிக்கிறார். ஆனால் கண்ணம்மாவோ வரவில்லை. இதனால் ஹேமா நீங்கள் லட்சுமிக்காக பேசுங்கள் என்று கூறியபோதும், அதனை கேட்காமல் பாரதி சென்று கொண்டிருக்கிறார்.
அப்போது லட்சுமி அழவே, யோசித்துப் பார்த்து மீண்டும் பாரதி வந்து நான் அவளுக்காக கையெழுத்து போடலாமா? என்று கேட்கிறார். ஆனால் அவரது ஆசிரியை பெற்றோர் மட்டும்போட வேண்டும் என கூறிய போது, நானும் லட்சுமிக்கு பெற்றோர் போல தான் என்று பாரதி கூறியுள்ளார்". இந்த ப்ரோமோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் எப்படியும் பிக்பாஸ் ஆரம்பிக்க இருப்பதால் இந்த நாடகம் முடியப்போகிறது என்று கூறி வருகின்றனர்.