மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BharathiRomance: வின்டேஜ் பாடலுடன் மாஸ் செய்யும் பாரதி.. இவரைத்தானே எதிர்பார்த்தோம்.. ஆரவாரத்தில் பொங்கும் ரசிகர்கள்..!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தமிழக மக்களின் பேராதரவை பெற்ற நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா. கடந்த வாரம் வரை கண்ணம்மா, குழந்தைகளை ஏற்க முடியுமா? என எண்ணி விம்மி தவித்த பாரதிக்கு இறுதியில் விடை உண்மை கிடைத்தது.
இந்த உண்மையை அறிந்தவாறு கண்ணம்மா தனது சொந்த ஊருக்கே புறப்பட்டு சென்றுவிட, அன்றைய கண்ணம்மாவை போல் மனைவியை தேடி புறப்பட்ட பாரதி ஒரு வழியாக மனைவி & குழந்தைகளை கண்டுபிடித்துவிட்டார். அவரை வேண்டாம் என கண்ணம்மா ஒதுக்கினாலும், காதல் ரசம் அங்கங்கு எட்டிப்பார்ப்பதால் வரவேற்பு பெற்றுள்ளது.
பாரதியும் - கண்ணம்மாவும் எப்போது சேருவார்கள்? என்ற கேள்வியுடன் மண்டையை உடைத்த ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் மிஞ்சினாலும், பாரதி தனது பழைய பாணியில் காதல் சேட்டைகள் செய்ய தொடங்கிவிட்டதால் மீண்டும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த வார ப்ரமோவும் அதற்கேற்றாற்போல இடம்பெற்றுள்ளது.