மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகுதா?.. மார்பக புற்றுநோயை மறைக்கும் தனம்.. சோகத்தில் ரசிகர்கள்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணன் - தம்பிகளின் பாசப்பிணைப்பை கருவாகக்கொண்ட நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது கண்ணன் வாங்கிய கடனுக்கு கடன் கொடுத்தவர்கள் அவதூறாக பேசியதன் விளைவாக கதிர் அவர்களை தாக்கிய வழக்கில் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
அவரை மீட்க தம்பிகள் மற்றும் அண்ணன்கள் போராடிவரும் நிலையில், மூன்றாக வெட்டப்பட்டு கிடந்த குடும்பம் கதிரின் முயற்சியால் ஒன்றிணையும் நிகழ்வு நடந்தது. ஆனால், ஜீவா தனது முடிவில் இருந்து பின்வாங்காத காரணத்தால், அண்னன்-தம்பிகளுக்குள் ஒற்றுமை இருந்தாலும், ஜீவா மட்டும் தனித்தே இருந்துவிடுகிறார்.
இதற்கிடையே தனம் தனது மார்பக வலி குறித்து சோதிக்க மருத்துவமனைக்கு வந்தபோது, அவருக்கு மார்பக புற்றுநோய் இரண்டாவது கட்டத்தில் இருப்பது உறுதியானது. அதனை மீனா அறிந்துகொள்கிறார். தனம் குடும்பத்தினரிடம் அதனை தெரிவிக்கவேண்டாம் என கூறுகிறார்.
அதற்கு ஒத்துழைக்காத மீனா, நமது குடும்பத்திற்கு தகவலை கட்டாயம் சொல்ல வேண்டும் என கூறுகிறார். இதனால் எதிர்வரும் வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு கடும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கவுள்ளது. இதுவே ப்ரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகுதா?, எண்டு கார்டு போட்டாங்க போலயே என்று சோகத்துடன் கமென்ட் செய்து வருகின்றனர்.