மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இங்க உனக்கென்னடா வேல?.. கண்ணனை பார்த்து கடுப்பான மூர்த்தி.. அண்ணனின் பேச்சை மீறியதால் வந்த வினை..!!
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு வெளியேறிய கண்ணன்-ஐஸ்வர்யா, குடும்பத்தை எப்படி நடத்துவது? என்று தெரியாமல் கிரெடிட் கார்டு மூலம் கடனை வாங்கி பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை செலுத்துமாறு கண்ணனிடம் கேட்டும் அவர் சரிவர பதில் கூறாததால், அவதூறாக பேசியதன் விளைவாக கதிர் அவர்களை தாக்கிய வழக்கில் காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவரை மீட்க ஜீவா மற்றும் மூர்த்தி போராடிய நிலையில், இறுதியாக மீட்டு ஒவ்வொரு திசையில் பிரிந்துபோன குடும்பம் மீண்டும் இணைந்துள்ளது.
மேலும் கதிர் தனது முயற்சியால் குடும்பத்தை இணைக்க போராடி வருகிறார். இந்த வார ப்ரோமோவில் கண்ணன் மீண்டும் மூர்த்தி வீட்டிற்கு வர, கடுப்பான மூர்த்தி இங்கே ஏன் வந்தாய்? என்று கேட்கும் போது கதிர் தான் அழைத்து வந்தார் என்பது தெரிய வர இந்த முடிவை மூர்த்தி ஏற்பாரா? என்று கேள்விக்குறி எழுந்துள்ளது.