மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என்னை காதலிக்கும் ஒரு நபர் இருந்தால் போதும்" பேட்டியில் திடீரென்று கண் கலங்கிய பிரியங்கா.!?
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான பிரியங்கா, முதன் முதலில் சன் டிவியில் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் முதன் முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பங்கேற்ற பிரியங்கா, அவரது பேச்சுத் திறமையால் ரசிகர்களின் மனதை வென்றார். முதன்முதலில் கொஞ்சம் காரம் கொஞ்சம் காபி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்பு ஒல்லி பெல்லி, கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், கிச்சன் சூப்பர் ஸ்டார், கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பங்கேற்று ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமாகியது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்காவின் கணவர் வராத காரணத்தால் பிரியங்காவும், அவரது கணவரும் விவாகரத்து செய்து விட்டனர் என்று பலரும் வதந்திகளை கிளப்பி வந்தனர். ஆனால் பிரியங்கா இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரியங்கா, "நான் எடுக்கும் ஒரு சில முடிவால் என் அம்மா மிகவும் கஷ்டப்படுகிறார். இதற்கு பின்பு என் அம்மாவை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் என்னை காதலிக்கும் ஒரு நபர் இருந்தால் போதும். வேறு எதுவும் இந்த வாழ்க்கையில் முக்கியம் இல்லை" என்று கண் கலங்கியபடியே பேட்டி அளித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பிரியங்கா அவரது கணவரை விவாகரத்து செய்யப் போகிறாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.