மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சத்தமே இல்லாமல் சட்டென்று திருமணத்தை முடித்த பாக்கியலட்சுமி அமிர்தா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, கொரோனா காலத்தில் மக்களின் மிகசிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பாலாவின் கவிதையால் பிரபலமான நடிகை ரித்விகா.
இவரை பாலா புகழாத நாட்களே இல்லை என்று கூறும் அளவிற்கு, எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவர் வந்துவிட்டால் தனது காதல் மழையை பொழிந்து தள்ளிவிடுவார். இவருக்கேனே ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடரில், குழந்தையுடன் கணவரை இழந்த பெண்ணாக நடித்து வருகிறார். இவரும், இத்தொடரின் நாயகி பாக்யலட்சுமியின் மகன் எழில் காதல் வயப்பட்டு திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக நெடுந்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், நடிகை ரித்விகா சத்தமே இல்லாமல் திருமணம் செய்துகொண்டுள்ளார். வினு என்பவரோடு அவர் மாலை மாற்றி கோவிலில் திருமணம் செய்துகொண்டது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.