மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. இவரா! பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் நுழைந்த விஜய் டிவி பிரபலம்! யார்னு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதன் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக பிக்பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறிய நிலையில் தற்போது சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியும் போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு எலிமினேட்டாகி வரும் நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து அனிதா சம்பத் வெளியேறினார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது விஜய் டிவி பிரபலமான தீனா வருகை தந்துள்ளார். இனி நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.